டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான புகார்கள், குறைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் எளிதாக தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ வழிகளிலேயே புகார் அளிக்க வேண்டும்; இனி எந்த சமரசமும் இன்றி துறை செயல்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

அரசு வெளியிட்ட அறிக்கையில், நுகர்வோர் புகார்கள் மற்றும் குறைகளை பதிவு செய்யும் வகையில் டாஸ்மாக் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் ஆகஸ்ட் 31 முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புகார்கள், குறைகள் மற்றும் விசாரணைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-889-2015 மற்றும் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் +91-7397720230 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். இந்த சேவை மையம் 24 மணி நேரமும் புகார்களை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் மூலம் தொடர்பு கொள்ளலாம்: Facebook: TASMAC Official, X: @TasmacOfficial, Instagram: @tasmac_official, YouTube: TASMAC Official.

இந்த வழிகளில் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு கிடைக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.