மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்த பின்னர், முதல்வர் விஜய் சேலம் விமான நிலையத்துக்கு புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதியம் 2 மணியளவில், மேட்டூர் அனல் மின் நிலையம் சின்னகாவூர் அருகே அவரது வாகன அணிவகுப்பு சென்றபோது, சாலையோரத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த ராமசாமி (60), அவரது மனைவி பழனியம்மாள் (52), ராமசாமியின் சகோதரி செல்லம் (73) ஆகியோரை அவர் கவனித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வாகனத்தை நிறுத்தச் சொல்லி இறங்கிய முதல்வர் விஜய், ராமசாமியின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரால் வரவேற்கப்பட்டார். வீட்டுக்குள் அவர் செல்லத்திடம் விவசாயப் பணிகள் குறித்து கேட்டறிந்து, அன்புடன் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சந்திப்பின்போது மூதாட்டி செல்லத்துக்கு கண்ணாடி வழங்கினார். மேலும் குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டி மற்றும் பட்டு சேலைகளையும் வழங்கி வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர் புறப்பட்டார்.
இதற்குப் பிறகு மேச்சேரி திமிரிக்கோட்டையில் சாலையோரம் நின்றிருந்த மூன்று மூதாட்டிகளிடமும் நலம் விசாரித்ததாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.





