நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பல நூறு வீடுகள் தடம் தெரியாமல் அழிந்துள்ளன. பல இடங்களில் உரிமையாளர்கள் பற்றிய தகவலும் கிடைக்காததால், குடும்பங்களின் நிலை குறித்து உறுதியற்ற சூழல் நிலவுகிறது.

துங்கே பகுதியில், வீடு தரைமட்டமாகி விட்ட நிலையிலும், அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வரும் கருப்பு நிற நாய் ஒன்று எஜமானரைத் தேடுவது போல காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக படுத்துக் கொண்டு, இன்னொரு நாய் தொடர்ந்து காவல் காக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, “வாயில்லா ஜீவன்களின் விசுவாசம்” என பலரும் உருகி கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.