சென்னை: சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குனிந்து அல்லது வளைந்து பேச வேண்டாத வகையில் மைக்குகளை அமைத்து தர வேண்டும் என்று சபாநாயகர் பிரபாகர் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபையில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அமரும் இருக்கைகளின் முன்புற மேஜைகளில் மைக் மற்றும் தொடுதிரை சிறுகணினி பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் மைக் கேபிள் குறுகியதாக இருப்பதால், முகத்துக்கு நேராக வைத்து பேச முடியாமல் சிலர் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.
மனித–வனவிலங்கு மோதல்களைத் தவிர்ப்பது தொடர்பான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. பால் மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்ப, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பதிலளித்தார். அப்போது மைக் உயரம் குறைவாக இருந்ததால் பேசுவதில் அவருக்கு இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதைக் கவனித்த சபாநாயகர், இனி எம்.எல்.ஏ.க்கள் மைக்கில் பேச குனிந்து வளைந்து நிற்கும் நிலை இருக்கக்கூடாது என்று கூறி, பேசும் போது தேவையான உயரத்தை கவனித்து அடுத்தமுறை அதற்கேற்ப மைக்கை சரிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
சபாநாயகர் கூறியதை ஆளும் தரப்பினரும் எதிர்க்கட்சியினரும் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.





