மேற்கு தாம்பரத்தில் கூடுதல் மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.7,000 லஞ்சம் பெற்றதாக, மின் வாரிய உதவி மின் பொறியாளர் ஒருவரை லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) போலீசார் கைது செய்துள்ளனர்.

கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த சிவசெல்வன் (47) என்பவர், தந்தை ஜெயராமன் பெயரில் உள்ள வீட்டுக்கு கூடுதல் ஒற்றை மின் இணைப்பு வேண்டி ஜூலை 9 அன்று விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. கட்டணம் செலுத்திய பின்னரும், ஆகஸ்ட் 6 அன்று அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உதவி பொறியாளர் சந்திரன் ரூ.10,000 லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் அதை ரூ.7,000 ஆகக் குறைத்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லஞ்சம் வழங்க விரும்பாத சிவசெல்வன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ரூ.7,000 பெறும் போது சந்திரனை கையும் களவுமாக பிடித்து DVAC போலீசார் கைது செய்தனர் என தெரிவிக்கப்பட்டது.