ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கீவில் தெரிவித்தார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளின்போதும் மோதல் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில், ஜெய்சங்கர் உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கீவில் அவர் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆன்ட்ரி சிபிஹாவை சந்தித்து, போர் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
நிருபர்களிடம் பேசிய ஜெய்சங்கர், மோதலை முடிக்க இந்தியா எந்த வகையிலாவது உதவ முடிந்தால் அதனை செய்யத் தயாராக இருப்பதாக கூறினார். மேலும், கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் குறித்தும் விவாதித்ததாக தெரிவித்தார்.
கருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சூழ்நிலை இந்தியாவுக்கும் கவலைக்குரியதாக உள்ளது; அந்தப் பகுதியில் நடந்த சம்பவங்களில் இந்திய கடல் மாலுமிகள் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





