பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் பெறப்பட்ட புதிய தரவுகள், பிரிட்டனிலேயே மிகச் சிறிய வயதுடைய குழந்தைகளுக்கும் கட்டாயத் திருமண அபாயம் இருப்பதாகக் காட்டி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் தரவுகளின்படி, 2021 முதல் 2025 வரை பிரிட்டனின் கட்டாயத் திருமண தடுப்புப் பிரிவுக்கு மொத்தம் 406 புகார்கள் வந்துள்ளன. இதில் வயது விவரங்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.
பாதிக்கப்பட்டோர் பட்டியலில் 5 வயது அல்லது அதற்குக் குறைவான 27 குழந்தைகளும், 12 வயது அல்லது அதற்குட்பட்ட 100 குழந்தைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் குறித்து விவாதம் தீவிரமடைந்துள்ளது.
பதிவான வழக்குகளில் 165 பேர் கட்டாயத் திருமணத்துடன் தொடர்பாக பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பிரிட்டனில் கட்டாயத் திருமணம் செய்து வைப்பது குற்றமாகும்; அதிகபட்சம் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் நிலையில், இந்தத் தரவுகள் அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.





