வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்குப் பாஸ்போர்ட் வழங்கும் போது, பெற்றோர் தங்களின் குடியுரிமை சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, குழந்தையுடன் உள்ள உறவை நிரூபித்து, புகைப்பட அடையாள அட்டையைக் காட்டினால் போதுமான நிலையில் உள்ளது. ஆனால் புதிய திட்டம் அமலுக்கு வந்தால், இதனுடன் பெற்றோர் அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தையும் வழங்க வேண்டியதாக இருக்கும்.

டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக பதவியேற்றதிலிருந்து, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் விசா விதிகளில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை பிறப்பு குடியுரிமையை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தச் சட்டத்துடன் தொடர்புடைய அடிப்படை உரிமையை பாதிக்கக்கூடும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.