பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) சித்தார்த்தன் (48) மீது லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவரை சஸ்பெண்ட் செய்ய கலெக்டர் ஷரண்யா அரி உத்தரவிட்டுள்ளார்.
செய்தி விவரப்படி, பணிகளை முடித்த ஒப்பந்ததாரர் ஒருவர் பில் தொகை பெறுவதற்காக பிடிஓவை அணுகியபோது, ரூ.6,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஒப்பந்ததாரர் ரூ.4,500 வழங்கியதாகவும், மீதமுள்ள ரூ.2,000-ஐ தருமாறு பிடிஓ கையால் காகிதத்தில் எழுதி காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை ஒப்பந்ததாரர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில், அது வைரலானது. இதையடுத்து பிடிஓ சித்தார்த்தனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.





