காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூலை இந்தியாவில் வரும் நவம்பர் 10ஆம் தேதி வெளியிடுவதாக, அமெரிக்காவின் நியூயார்க் தலைமையிடமாகக் கொண்ட ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் அறிவித்துள்ளது.
Belonging: A Journey of Love என்ற தலைப்பில் 544 பக்கங்களாக தயாராகும் இந்த நூலின் சர்வதேச வெளியீட்டை, பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரிவான ஆல்பிரட் ஏ நாப் வெளியிடும் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இந்தியாவில் இந்த நூலை வெளியிடத் தயாராக இருந்ததாக கூறிய பெங்குயின் இந்தியா, பின்னர் இந்திய வெளியீட்டிலிருந்து விலகுவதாக அறிவித்தது. பதிப்பகம் சில மாற்றங்கள் செய்யவும், சில பகுதிகளை நீக்கவும் கேட்டதை சோனியா ஏற்க மறுத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹார்பர் காலின்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பதிவில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சுயசரிதை நூல் இந்தியாவில் நவம்பர் 10ஆம் தேதி வெளியிடப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.





