அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்ற சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், அங்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் மேடைக்கு சென்று கிடார் இசைக்கருவியை வாசித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தாய்லாந்து பிரதமர் அனுதின் மைக் பிடித்து பாடத் தொடங்கினார். ‘பீட்டில்ஸ்’ குழுவின் “லெட் இட் பீ” மற்றும் பாப் டைலனின் “புளோயிங் இன் த வின்ட்” ஆகிய பாடல்களை அவர் பாட, வாங் கிடார் மூலம் இசை ஒத்துழைப்பு வழங்கினார்.

இந்த நிகழ்வின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி ‘டிரெண்ட்’ ஆனது. பாடல்கள் பொருத்தமானவை என பலரும் கருத்து தெரிவித்தனர்.

சமூக வலைதளங்களில் இதை “மியூசிக்கல் டிப்ளமசி” என சிலர் வர்ணித்தனர். உலகுக்கு இப்படியான தருணங்கள் தேவை என்றும், இது உண்மையான தலைமைத்துவத்தின் வெளிப்பாடு என்றும் பலர் பதிவிட்டனர்.