ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேசப் பயணத்தின் இறுதிக் கட்டமாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் லண்டன் வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்பி பாப் பிளாக்மேன், எதிர்காலம் குறித்து மோகன் பாகவத் பகிர்ந்த கருத்துகளையும் யோசனைகளையும் கேட்டு மகிழ்ச்சி அடைந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஹிந்து கவுன்சில் யுகே, ஹிந்து போரம் ஆப் பிரிட்டன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உள்ளூர் ஹிந்து மற்றும் சமூக அமைப்புகள், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் ஆர்எஸ்எஸ் முயற்சிகளை பாராட்டி ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சில எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் டான் ஜார்விஸ், இந்த வருகை பிரிட்டனின் குடிவரவு விதிகளுக்கு உட்பட்டே உள்ளது என பார்லிமென்டில் விளக்கம் அளித்துள்ளார்.

பிரிட்டனில் நடைபெறும் இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் மோகன் பாகவத் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.