இந்தியாவில் தொடங்கப்படும் புதிய சூரிய மின் மற்றும் தரைப்பகுதி காற்றாலை திட்டங்களில் பேட்டரி மின்சார சேமிப்பு வசதியை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
திட்டத்தின் படி, 2027 ஜூலை முதல் செயல்பாட்டுக்கு வரும் புதிய திட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து, தேவையான நேரத்தில் பயன்படுத்தும் ஏற்பாடு கட்டாயமாக்கப்படும்.
மத்திய மின்சார ஆணையம் (CEA) தயாரித்துள்ள வரைவு விதிமுறைகளில், புதிய சூரிய மின் மற்றும் தரைப்பகுதி காற்றாலை திட்டங்களில் குறைந்தது 10% மின் உற்பத்தி திறனுக்கு இணையான அளவில், 2 மணி நேரத்திற்கு மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரி வசதி இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2029 ஜூலை முதல் இந்த விதிமுறை கடுமையாக்கப்படும். அப்போது, குறைந்தது 10% திறனுக்கான மின்சாரத்தை 4 மணி நேரம் சேமிக்கும் வகையில் பேட்டரி வசதி அமைக்க வேண்டியதாக இருக்கும்.





