புதுடில்லி: தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து வளர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 5 அன்று பிரதமர் தனது இல்லத்தில் தேசிய ஆசிரியர் விருதுகளைப் பெற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
அந்த உரையாடலில், குழந்தைகளின் ஸ்கிரீன் டைம் அதிகரிப்பை குறைக்க வெளி விளையாட்டுகள் மற்றும் படைப்பாற்றல் பயிற்சிகள் அவசியம் என மோடி கூறினார். மேலும், போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து குழந்தைப் பருவத்தை பாதுகாக்க பாடத்திட்டங்களைத் தாண்டியும் ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





