புதுடில்லியில் நடைபெற்ற விழாவில், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

ஆசிரியராக பணியாற்றி பின்னர் இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதியை முன்னிட்டு, கல்வித் துறையில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 48 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா மற்றும் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ்.

விழாவில் விருதுகளை வழங்கிய ஜனாதிபதி, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.