அமெரிக்க சமூக ஊடக பிரபலமான லிஸ், மும்பை மெட்ரோவின் சுத்தம் மற்றும் பயணிகளுக்கான வசதிகளைப் பாராட்டி வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. அந்த வீடியோக்கு சுமார் 65 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோவில், டிக்கெட் கட்டணம் வெறும் ரூ.20 மட்டுமே எனக் குறிப்பிட்ட லிஸ், நிலையம் சுத்தமாக இருந்ததாக கூறுகிறார். மேலும், பயணிகள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட பிளாட்பார்ம் ஸ்கிரீன் கதவுகள் சிறப்பான அம்சம் என்றும், பயணம் பாதுகாப்பாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மும்பையில் வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலிலும் ரயில் பெட்டிக்குள் ஏசி நன்றாக செயல்பட்டதாக அவர் கூறினார். நியூயார்க் மெட்ரோவுடன் ஒப்பிட்டு, மும்பை மெட்ரோ அதிக சுத்தமாக இருப்பதாகவும், மொத்த அனுபவம் “எக்ஸலன்ட்” என்றும், அமெரிக்கா இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பதிவுக்கு நமது நெட்டிசன்கள் நன்றி தெரிவித்து கருத்துகள் பதிவிட்டு வருவதாகவும், வீடியோ தொடர்ந்து பரவிவருவதாகவும் கூறப்படுகிறது.