திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெரிய கொல்லகுப்பம் மற்றும் சுப்பராயன் கோயில் பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கிடையே வன்முறை மோதல் ஏற்பட்டது.

தகவலின்படி, சுப்பராயன் கோயில் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கத்தி மற்றும் இரும்புக் கம்பிகளுடன் கொல்லகுப்பம் சென்று அங்கிருந்த இளைஞர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குப் பின் தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.