சென்னை: பா.ஜ.க. தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவு தமிழக தலைவர் அர்ஜுனமூர்த்தி, ‘தினமலர்’ நாளிதழின் 75 ஆண்டு பயணத்தைப் பாராட்டி வாழ்த்து செய்தி வெளியிட்டார்.

தமிழ் கோட்பாட்டோடு செய்திகளை வழங்குவதோடு, உண்மை, நம்பிக்கை, சமூக பொறுப்பு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு 75 ஆண்டுகளாக தமிழ் சமூகத்தின் சிந்தனையோடும் வாழ்வியலோடும் ‘தினமலர்’ பயணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழின் பண்பாடு, கலாசாரம், மரபு, நாகரிகம் மற்றும் தமிழர் வாழ்வியல் விழுமியங்களை பேணி பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்த்ததில் ‘தினமலர்’ பங்களிப்பு தனிச்சிறப்பானது என்றும் அவர் தெரிவித்தார்.

இது ஒரு நாளிதழின் பயணம் மட்டுமல்ல; தமிழ் சமூகத்துடன் இணைந்து உருவான 75 ஆண்டுகால நம்பிக்கையின் முத்திரை எனக் கூறிய அவர், ‘தினமலர்’ தொடர்ந்து உண்மையை உரைத்து, தமிழையும் தமிழர் மரபையும் உயர்த்தி, சமூகத்திற்கு வழிகாட்டும் பணியை இன்னும் பல ஆண்டுகள் சிறப்பாகத் தொடர வேண்டும் என வாழ்த்தினார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாசியுடன் 75 ஆண்டுகளாக தமிழ் சமூகத்திற்காற்றிய அரும்பணிக்கு கிடைத்த உச்சபட்ச அங்கீகாரமாக இந்த நிகழ்வு அமைந்ததாகவும், இது ‘தினமலர்’ சேவைக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கே பெருமை எனவும் அவர் தெரிவித்தார்.