பீகாரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்த கனமழை காரணமாக கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளநீர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்ததால் பல இடங்களில் வீடுகள் மூழ்கியதாகவும், இதனால் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கை மட்டுமின்றி கண்டாக், கோசி, திகா, ஹதிதா உள்ளிட்ட முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

மழை தொடரும் நிலையில் நீர்மட்ட உயர்வை கண்காணித்து வருவதாகவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பாதிப்பை எதிர்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.