புதுடில்லி: இந்திய குழந்தை உரிமை மற்றும் குழந்தை திருமண ஒழிப்பு பிரசாரகர் புவன் ரிபு முன்னெடுத்த வலியுறுத்தலின் பின்னணியில், நவம்பர் 27-ஐ “சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினம்” என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

குழந்தை திருமணத்தைத் தடுக்கவும், அதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உலகளாவிய நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த தனி சர்வதேச தினம் அவசியம் என புவன் ரிபு வலியுறுத்தினார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 27-ஆம் தேதி “குழந்தை திருமணம் இல்லா இந்தியா” என்ற பிரசாரம் நடத்தப்படுகிறது. அதே நாளை சர்வதேச அளவில் அங்கீகரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த முன்மொழிவை சார்ந்த தீர்மானத்தை மேற்கு ஆசிய நாடான சியரா லியோன் ஐ.நா.வில் அறிமுகப்படுத்தியது; அதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அறிவிப்பை வரவேற்ற புவன் ரிபு, இது இந்தியாவின் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கத்துக்கு முக்கியமான தருணம் என குறிப்பிட்டார்.