சென்னை: ஆறுகளில் தூய்மையான சூழலை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ஒருவர், காவிரி ஆற்றில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதும், ‘தோஷம் கழிக்கிறேன்’ என்ற பெயரில் பழைய ஆடைகள் ஆற்றில் வீசப்படுவதும் நடைபெறுகிறது என்று பதிவிட்டிருந்தார்.
குறிப்பாக பவானி, கொடுமுடி, மோகனூர் ஆகிய இடங்களிலுள்ள கோவில்கள் அருகே இந்த நிலை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் தூய்மையான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.





