பீஹார் மாநிலம் கோபால்கஞ்சில் திருட்டு அச்சம் காரணமாக ஒரு குடும்பம் எடுத்த வித்தியாசமான முடிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த மனோஜ் வேலைக்காக வெளிநாடு சென்ற நிலையில், வீட்டின் வாசலில் நிறுத்தப்படும் ஸ்கார்பியோ வாகனத்தை எப்படி பாதுகாப்பது என குடும்பத்தினர் கவலைப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்காக அவர்கள் பெரிய கிரேனை வரவழைத்து, வாகனத்தை தூக்கி தங்கள் இரண்டு மாடி வீட்டின் மொட்டை மாடியில் நிறுத்தினர். இதனால் திருடர்கள் எளிதில் அணுக முடியாத வகையில் வாகனம் பாதுகாப்பாக இருக்கும் என அவர்கள் கருதினர்.
கிரேன் மூலம் கார் மொட்டை மாடிக்கு தூக்கி வைக்கப்படும் காட்சிகள் கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது; பலரும் இந்த ‘திருட்டு தடுப்பு’ யோசனையைப் பார்த்து ஆச்சரியமும் சிரிப்பும் கலந்த கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.





