சென்னை அருகே காட்டாங்குளத்தூரில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயரில் உள்ள கார் பைக் மீது மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏவாக உள்ள ஜெகதீஸ்வரி, சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க சென்னை வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அரசு வாகனத்தில் வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட காரில் பயணித்தனர்.

அரசு வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படும் அந்த தனிப்பட்ட கார், காட்டாங்குளத்தூர் அருகே பைக் மீது மோதியது. இதில் இறையன்பு என்ற இளைஞர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமைச்சரின் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.