காலப்போக்கில் கடலில் மூழ்கியதாக கருதப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க துறைமுக நகரமான பூம்புகாரின் தொன்மையை வெளிக்கொணர தமிழக தொல்லியல் துறை முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன், பூம்புகார் கடற்கரைப் பகுதியில் 2025 மார்சிலும் 2026 மார்சிலும் இரு கட்டமாக நீர்மூழ்கி அகழாய்வு மற்றும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வில் கடலுக்கடியில் உள்ள பழங்கால பூம்புகாரைச் சேர்ந்த கட்டட அமைப்புகள், சுற்றுச்சுவர் மற்றும் சாலை போன்ற கட்டமைப்புகளின் தடயங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த கண்டுபிடிப்புகள் பூம்புகாருடன் தொடர்புடைய பழந்தமிழ் நாகரிகம் குறித்த மேலதிக ஆய்வுகளுக்கு ஆதாரமாக அமையும் என்றும், அந்தப் பகுதியின் கடல்சார் வரலாற்றை புரிந்துகொள்ள உதவும் என்றும் அதிகாரிகள் கூறினர்.