மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட இருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

செப்டம்பர் 8 அன்று மும்பை நீடா அம்பானி கலாசார மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது அங்கு இருந்த ஒருவரையும், அவருடன் வந்த மற்றொருவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர் ரோஹன் பரேக் (24) என தெரியவந்தது. அவர் பிரதமர் அலுவலக (பிஎம்ஓ) அதிகாரி எனக் காட்டும் அடையாள அட்டையை வைத்திருந்ததாகவும், ஆய்வில் அது போலி என தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அவருடன் வந்த நபரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மும்பை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஏன் அங்கு வந்தனர், நோக்கம் என்ன என்பதைக் குறித்து மொபைல் போன் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.