பழநி முருகன் கோவிலை நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் சட்டசபையில் உறுதி அளித்தார்.
விவாதத்தின் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரவி மனோகரன், பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து பல மைல் தூரம் நடந்து பழநிக்கு வருகிறார்கள்; ஆனால் நகரம் மாசுபட்டதாக மாறிவிட்டது என்று கூறி, பழநியை புனித நகரமாக உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், கோவிலின் திருப்பணிகள், அன்னதானக் கூடங்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது எம்.எல்.ஏ.வும் உடன் இருந்ததாக தெரிவித்தார்.
மேலும், பழநி கோவிலை ‘மாடர்ன்’ திருக்கோவிலாக உருவாக்குமாறு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறிய அமைச்சர், அனைத்து பணிகளும் நிறைவுபெற்று கோவில் மிகச்சிறப்பாக மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.





