புதுடில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், முப்படைகளின் போர்திறனை வலுப்படுத்த ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பில் நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், அணுசக்தி தொடர்பான பாதிப்புகளை கண்டறியும் வாகனங்கள், தானியங்கி கண்ணிவெடி அமைப்புகள், அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை இந்த கொள்முதலில் இடம்பெறுகின்றன என்றனர்.

மேலும் கடற்படை விமான நிலையங்களில் உள்ள பழைய ரேடார்களுக்கு மாற்றாக ‘ஆருத்ரா’ ரேடார்கள் நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மொத்த கொள்முதலில் ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் 98 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்தே வாங்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.