ஜப்பானில் வசிக்கும் இந்தியரான ஓம், டோக்கியோவில் தெளிவாகத் தெரியும் நீல வானத்தையும் டில்லியின் மங்கலான வானத்தையும் ஒப்பிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
அதில், “மக்கள் தொகை போன்ற காரணங்களைச் சொல்லலாம்; ஆனால் டில்லியை விட டோக்கியோவில் மக்கள் தொகை அதிகம்” எனக் குறிப்பிட்டு, டில்லியில் ஏன் இதுபோன்ற தெளிவு இல்லை என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
தேசிய தலைநகரை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரித்தால் மக்களின் அன்றாட வாழ்க்கைத்தரம் உயரும் என்றும், வெளிநாடுகளில் இந்தியா குறித்த மதிப்பீடும் மேம்படும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ, நகரங்களின் சுத்தம் மற்றும் வாழ்வாதார தரம் தொடர்பான விவாதங்களை மீண்டும் சமூக ஊடகங்களில் தூண்டியுள்ளது.





