நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், அதனை ஒட்டிய பயண தினங்களில் முக்கிய உள்நாட்டு விமான வழித்தடங்களில் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன.

சில வழித்தடங்களில் வழக்கமாக ரூ.7,000 அளவில் இருந்த கட்டணம், பண்டிகை நாட்களை முன்னிட்டு ரூ.15,000 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.12 முதல் 18 வரை நடைபெறும் நவராத்திரி காலத்தில் மும்பை–கொல்கட்டா ஒரு வழி டிக்கெட் கட்டணம் ஒருவருக்கு ரூ.16,000 வரை சென்றுள்ளது. பொதுவாக இந்த வழித்தடத்தில் கட்டணம் ரூ.8,000-க்குள் இருக்கும் என கூறப்படுகிறது.

டில்லி–மும்பை வழித்தடத்திலும் உயர்வு காணப்படுகிறது. வழக்கமாக ரூ.6,500 அளவில் இருக்கும் கட்டணம், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வரும் பண்டிகை நாட்களில் ரூ.10,000 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான டிக்கெட்டுகள் சில இடங்களில் ரூ.25,000 வரை விற்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.