ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஆளில்லா நீர்மூழ்கி கலன் ஒன்றை கைப்பற்றியதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான்–அமெரிக்கா இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ள ஈரான், அமெரிக்கா தங்களது அத்துமீறல்களை நிறுத்தினால் மட்டுமே அதைத் திறப்பதாக தெரிவித்துள்ளது. இதே நேரத்தில், ஈரானுக்கு மேலும் அழுத்தம் தரும் வகையில் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.
இந்த சூழலில், கைப்பற்றப்பட்ட கலன் ஆளில்லாமல் இயங்கும் வகையில் இருப்பதாகவும், அதில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளது. மேலும், அதே பகுதியில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ட்ரோன் ஒன்றை தங்களது வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க ராணுவம் தங்களது நீர்மூழ்கி ட்ரோன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததாக அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.




