கேரள அரசு போக்குவரத்து கழகம் (KSRTC) விமானத்தில் இருப்பது போன்ற வசதிகளுடன் புதிய பிரீமியம் பஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த பஸ்சின் வசதிகள் பயணிகளை ஆச்சரியப்படுத்துவதாக கூறப்படுகிறது.
பஸ்சில் பிளஷ் லெதர் இருக்கைகள், அவற்றில் இன்பில்ட் ஸ்கிரீன், வாஷ் ரூம், இலவச வைபை மற்றும் சார்ஜிங் போர்ட்டல்கள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. நீண்ட தூரப் பயணத்திற்கு கூடுதல் வசதியை நோக்கமாகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் பானங்களிலும் சிறப்பு ஏற்பாடு உள்ளது. காபி, டீ மட்டுமின்றி ஷவர்மாவும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக பணிப்பெண்களும் பஸ்சில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
முதல் கட்டமாக இந்த பிரீமியம் சேவை கொச்சி–திருவனந்தபுரம் வழித்தடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பஸ்சின் வசதிகளை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.




