இந்தியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் இலங்கை மண் பயன்படுத்தப்பட அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகே உறுதி அளித்துள்ளார்.

இந்த உறுதி, இலங்கைக்கு மூன்று நாள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது.

சந்திப்பில் இருநாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் மூன்று ஒப்பந்தங்களில் இருதரப்பும் கையெழுத்திட்டன.

சந்திப்பு குறித்து எக்ஸ் பதிவில் ராஜ்நாத் சிங், செப். 9 அன்று நடந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், பிரதமர் மோடியின் வாழ்த்துகளை இலங்கை அதிபரிடம் பகிர்ந்ததாகவும் கூறினார்.

மேலும், அதிபருக்கும் அவரது அரசாங்கத்திற்கும் வாழ்த்துகளை தெரிவித்ததாகவும், இருநாடுகளும் மக்களின் நலனுக்காக இணைந்து செயல்பட உறுதி கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.