தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையிலிருந்து ‘எமிரேட்ஸ்’ விமானத்தில் துபாய் சென்று, அங்கு ஒரு நாள் தங்கி, பின்னர் பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் தற்போது துபாயில் இருப்பதால், இடைநிறுத்தத்தின் போது அவரை முதல்வர் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பயணம் 10 முதல் 15 நாட்கள் வரை திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், தலைமை செயலக வட்டாரங்கள் ஒரு வாரத்திற்குள் சென்னை திரும்பும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கின்றன.