ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரித்துள்ளதாக டெஹ்ரான் தெரிவித்துள்ளது. அங்கு ஈரானின் ஐந்து எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் ஈரான் கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி முதல் ஈரான்–அமெரிக்கா இடையே மோதல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. அணுசக்தி விவகாரம், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு உள்ளிட்ட பல விஷயங்களில் உடன்பாடு ஏற்படாததே இதற்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படை, ஜலசந்தி நுழைவாயிலில் அமெரிக்க போர்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது. மேலும், அமெரிக்காவின் ‘எம்.கியூ-9 ரீப்பர்’ உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறியது.
இதற்கு பதிலடியாக, ஹார்முஸ் பகுதியில் ஈரானின் ஐந்து எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்தது. சில மணி நேரங்களில், ‘டைவ்-எல்டி’ என குறிப்பிடப்பட்ட அமெரிக்க அதிநவீன நீர்மூழ்கி கப்பலை தாங்கள் சிறைபிடித்ததாகவும் ஈரான் கூறியுள்ளது.
ஆனால் அந்த நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பக் கோளாறால் பழுதடைந்ததாகவும், அதில் எந்த ரகசியத் தகவல்களும் இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்ததாக செய்தி கூறுகிறது.




