ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். சமூகத்தில் ‘தேசமே முதன்மை’ என்ற உணர்வை வலுப்படுத்துவதில் அவர் பங்கு குறிப்பிடத்தக்கது என்றும் அவர் பாராட்டினார்.

சமூக ஊடகப் பதிவில், ஆர்எஸ்எஸ் தலைவராக பொறுப்பு வகிக்கும் மோகன் பாகவத் தேச சேவை, சமூக நல்லிணக்கம் மற்றும் இந்திய கலாசாரத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார் என்று அமித்ஷா குறிப்பிட்டார்.

சமூகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற அவர் நாடு முழுவதும் பயணம் செய்ததாகவும், தலைவராக சேவை மனப்பான்மை, நற்பண்புகள் மற்றும் ஆளுமை மேம்பாட்டை ஊக்குவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் சமூகத்தில் ‘தேசமே முதன்மை’ என்ற மனப்பாங்கு மேலும் வலுப்பெறுகிறது என்றும், மோகன் பாகவத் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் திகழ வேண்டி பிரார்த்திப்பதாகவும் அமித்ஷா கூறினார்.