செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் டெல்லியில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் பங்கேற்க மாட்டார் என்று வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏழு நாடுகளை உள்ளடக்கிய பிம்ஸ்டெக் (BIMSTEC) கூட்டமைப்பின் தற்போதைய தலைமை பொறுப்பை வங்கதேசம் வகித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.

பிரதமர் பங்கேற்காததற்கான காரணம் குறித்து அறிவிப்பில் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.