அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதலை நினைவுகூர்ந்து, அந்த துயர நிகழ்வுக்கு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்தார்.
வெளியிட்ட பதிவில், உயிரிழந்தவர்களுக்கு இந்தியா அஞ்சலி செலுத்துவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உறுதுணையாக நிற்பதாகவும் அவர் கூறினார். உலகம் முழுவதும் பயங்கரவாதம் எண்ணற்ற உயிர்களைப் பலிவாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா பல தசாப்தங்களாக இந்தப் போராட்டத்தில் முன்னணியில் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். அச்சுறுத்தல் தொடர்ந்து உருமாறினாலும், அதன் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான இந்தியாவின் உறுதியும் எதிர்ப்பும் மாறாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பயங்கரவாதம் என்ற தீமையை ஒழிப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவு அளிக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.





