மூன்று நாள் பயணமாக புதுடில்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாரத மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. டில்லியில் செப்.12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு புடின் இந்தியா வந்துள்ளார்.
சந்திப்பின்போது, ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி, புடினுக்கு பரிசாக வழங்கினார்.
வர்த்தகம், முதலீடு, எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்; ரஷ்யா சார்பில் மூத்த அதிகாரிகள் புடினுடன் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு இந்தியா–ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க புடின் டில்லி வந்திருந்தார். கடந்த மாதம் பிஸ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் இடையேவும் மோடி–புடின் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.





