விவசாயிகளுக்கு புதிய பயிர்க் கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது என்று வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணையில் உள்ள நீரை எவ்வளவு பாசனத்திற்கு வழங்கலாம் என்பதை துறை ரீதியாக ஆய்வு செய்த பிறகே தண்ணீர் திறக்கப்பட்டதாக கூறினார்.
மேலும், மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம் என்றும், அதுபோன்ற காலகட்டத்திலும் விவசாயிகளுக்கு புதிய பயிர்க் கடன் கிடைப்பதில் தாமதம் இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
முதல்வர் அறிவித்த பயிர்கடன் தள்ளுபடி தொடர்பான மானியத் தொகை விரைவில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு வந்து சேரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கூட்டுறவு சங்கங்களுக்கு மாநில அரசின் நிதி உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், முன்பு தள்ளுபடிக்குப் பிறகு ஐந்தாண்டு காலத்திற்கு நிதி ஒதுக்கும் நடைமுறை இருந்த நிலையில் தற்போது அந்த முறைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.





