9/11 நினைவு தினம் நெருங்கும் நிலையில், இரட்டை கோபுர தாக்குதல் நடந்த நாளில் இந்திய டாக்சி டிரைவர் குர்விந்தர் சிங் செய்த உதவி குறித்து சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.
அந்த நாளில் நியூயார்க்கில் போக்குவரத்து வசதி பெரிதும் பாதிக்கப்பட்டதால் பலர் வீடு திரும்ப முடியாமல் சிக்கினர். அப்போது குர்விந்தர் சிங் கட்டணம் வாங்காமல் நூற்றுக்கணக்கான முறை டாக்சியை இயக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தாக்குதலுக்குப் பிந்தைய காலத்தில் சுமார் 40 நாட்கள் வரை அவர் இதேபோல் இலவசமாக சேவை செய்ததாகவும் அந்த தகவல் கூறுகிறது.
அவரின் செயலுக்கு அப்போது நியூயார்க் மேயராக இருந்த ரூடி ஜிலானி நன்றி தெரிவித்து பாராட்டு கடிதம் அனுப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
9/11 நினைவு தினத்தை முன்னிட்டு அளித்த பேட்டியில், “அனைவரையும் நேசியுங்கள், அனைவரையும் மதியுங்கள்; கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று அவர் கூறியதாகவும், இணையவாசிகள் பலரும் அவரை பாராட்டி பதிவிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





