சென்னை: தமிழகத்தில் மட்டுமல்ல, பல மாநிலங்களிலும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், காற்றாலை மின் உற்பத்தி தடைபட்டதன் காரணமாக இரண்டு நாட்கள் மின்சாரம் குறைவாக இருந்ததாக கூறினார்.

தேவையான மின்சாரத்தை நேற்று மாலை பொதுவிநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்து தேவையை பூர்த்தி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் மின்விநியோகம் சீராக நடைபெற்று வருவதாகவும், போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.