கீவ்: உக்ரைனுடன் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா மிகப்பெரிய மனித இழப்புகளை சந்தித்துள்ளதாக, பிரிட்டன் ராணுவ தரவுகளை மேற்கோள் காட்டி மேற்கத்திய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா–உக்ரைன் மோதல் நான்காண்டுகளை கடந்தும் தொடர்கிறது. களத்தில் மனித மற்றும் ஆயுத இழப்புகள் அதிகமாக இருந்தாலும், ரஷ்யா தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஆனால் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் முன்னேற்ற வேகம் கணிசமாக குறைந்துள்ளதாக பிரிட்டன் மற்றும் மேற்கத்திய உளவுத்துறை மதிப்பீடுகள் கூறுகின்றன.

பிரிட்டன் ராணுவ தரவுகளின்படி, 2022 பிப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 15 லட்சம் பேர் காயமடைந்துள்ளதாகவும், 10,000க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள், 3,000க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் பீரங்கி அமைப்புகள், 370க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இழந்துள்ளதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.