பிரிக்ஸ் மாநாட்டின் துவக்க நிகழ்வில், சீன அதிபர் ஷி ஜின்பிங் அமர்ந்திருந்தபோது அசவுகரியம் ஏற்பட்டது போலத் தோன்றியதை கவனித்த பிரதமர் நரேந்திர மோடி தனது துவக்க உரையை சில நொடிகள் இடைநிறுத்தினார்.
இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு செப்.12 அன்று தொடங்கி செப்.13 அன்று நிறைவடைந்தது. இதில் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுடில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற துவக்க அமர்வில் உரையாற்றிக் கொண்டிருந்த மோடி, ஷி ஜின்பிங் அசவுகரியமாக இருப்பதைப் போலக் கண்டதால் பேச்சை நிறுத்தி, “சரி இருக்கிறதா?” என்று விசாரித்தார். அதற்கு ஷி ஜின்பிங் உடனடியாக பதிலளிக்கவில்லை.
இதையடுத்து மோடி, ஷி ஜின்பிங்கின் மொழிபெயர்ப்பாளரிடமும் கேட்டார். பின்னர் பிரச்னை இல்லை என்பதுபோல் ஷி ஜின்பிங் தலையசைத்ததைத் தொடர்ந்து, மோடி தனது உரையை மீண்டும் தொடர்ந்தார். அந்த அசவுகரியத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.





