ஜெருசலேம்: 2019 முதல் 2026 ஆகஸ்ட் மாதம் வரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாராவின் சிகையலங்காரம், ஒப்பனை உள்ளிட்ட தோற்றம் சார்ந்த செலவுகளுக்காக ரூ.4.04 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விவரங்கள், 2025 டிசம்பரில் வழக்கறிஞர் யாரா விங்க்லர் ஷலித் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமரின் சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைச் செலவுகள் குறித்து கேள்வி எழுப்பியதையடுத்து வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்குப் பதிலாக பிரதமர் அலுவலகம் மாதம் வாரியான செலவு விபரங்களை வழங்கியுள்ளது. அதில், 2019 தொடக்கம் கடந்த ஆகஸ்ட் வரை உள்நாட்டிலும் வெளிநாட்டு பயணங்களிலும் பிரதமர்களின் சிகையலங்காரம், ஒப்பனை மற்றும் தோற்றம் சார்ந்த செலவுகளுக்காக மொத்தம் ரூ.4.49 கோடி செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த செலவின் சுமார் 90%—அதாவது ரூ.4.04 கோடி—நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாராவுக்கே செலவிடப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.