மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி (நாதக) தனித்து போட்டியிடும் என அறிவித்து, வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்து ‘தவெக’வில் இணைந்ததைத் தொடர்ந்து, அந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக, திமுக, தவெக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

இந்தச் சூழலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தாராபுரம் தொகுதியில் கார்த்திகா, மதுராந்தகம் தொகுதியில் ஜானகிராமன் போட்டியிடுவார் என அறிவித்தார்.

ஜானகிராமன் கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்; அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல கட்சிகள் களமிறங்கியுள்ளதால், இந்த இரண்டு தொகுதிகளிலும் ஐந்துமுனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் நாதக சார்பில் கார்த்திக் குமாரி போட்டியிடுவார் என்றும் சீமான் அறிவித்துள்ளார்.