ஜம்மு - காஷ்மீரின் சோனமார்க்கில் பாயும் சிந்து நதியில், ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்ற வாலிபர்களின் ஆபத்தான ஸ்டண்ட் பெரும் விபத்தாக மாறும் நிலையில் முடிந்தது.

ஸ்கார்பியோ வாகனத்தை ஆற்றுக்குள் செலுத்திய அவர்கள், நடுப்பகுதிக்கு சென்றபோது தண்ணீரின் வேகத்திற்கு வாகனம் தடுமாறி நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. வெளியேற வழியில்லாமல் அவர்கள் உதவி கேட்டு அலறினர்.

தகவலறிந்த போலீசாரும், உள்ளூர் மக்களும் நீண்ட நேரம் போராடி அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் ஸ்கார்பியோ வாகனமும் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது.

சம்பவத்துக்குப் பிறகு போலீசார் கடுமையாக எச்சரித்து, அஜாக்கிரதையாக நடந்துகொண்டதாக கூறி வாலிபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.