நடிகர் அஜித்தின் கார் ரேசிங் பின்னணியில் உருவாகும் ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தில், முதல்வர் விஜய் இடம்பெறலாம் என்ற தகவல் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த டாக்கு-டிராமா படத்தை ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான டிரைலர் தமிழகத்தின் பல தியேட்டர்களில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக பிரிட்டன் சென்றுள்ள விஜய், லண்டனில் நடைபெற்ற சில்வர்ஸ்டோன் – மிச்செலின் லே மான்ஸ் கப் கார் பந்தயத்தை நேரில் பார்த்தார். அஜித் பங்கேற்ற அந்த போட்டியை விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் இருவரும் இந்திய தேசியக் கொடியுடன் போஸ் கொடுத்த புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கிடையில், ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தில் விஜய் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில், ஜிவி பிரகாஷ் சமூக வலைதளத்தில் விஜய்–அஜித் புகைப்படத்தை பகிர்ந்து, இரு பெரிய ஆளுமைகளுடன் பணியாற்றியது மகிழ்ச்சி என பதிவிட்டு, #Gladiators என்றும் குறிப்பிட்டுள்ளார்.





