சென்னையில் இன்று (செப் 14) காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இதனால் சவரன் ரூ.1,13,000க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.45 குறைந்து ரூ.14,125 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை; கிலோ ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தை நிலவரங்களின் தாக்கத்தால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்க விலை ஏற்றத் தாழ்வாக இருந்து வருகிறது.

இதற்கு முன் செப் 12 அன்று, ஆபரண தங்கம் கிராம் ரூ.14,170க்கும், சவரன் ரூ.1,13,360க்கும் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டது.