திருச்சி எம்.பி.வும் ம.தி.மு.க. முதன்மை செயலருமான துரை வைகோ, தமிழக அரசில் அமைச்சராகும் ஆசை தனக்கு இல்லை என்று தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பூங்குடிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை அவர் திறந்து வைத்தார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய ம.தி.மு.க. திருச்சி தெற்கு மாவட்ட செயலர் தமிழ் மாணிக்கம், சிறந்த எம்.பியாக செயல்படும் துரை வைகோவை இடைத்தேர்தலில் நிறுத்தி தமிழக அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு பதிலளித்த துரை வைகோ, இவ்வாறு பேசுவதால் தானே சொல்லிக் கொடுத்து பேச வைத்ததாக நினைப்பார்கள் என்று கூறி, இனி இப்படிப் பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தற்போதைய அரசியல் சூழலிலும் இது பொருத்தமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.





