திருச்சியில் பேட்டியளித்த அமைச்சர் ரமேஷ், அரசியல் உரையாடலில் திமுக தரப்பு ஆபாசம், அவதூறு மற்றும் கீழ்த்தரமான பேச்சுகளை தொடர்ந்து பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
“மழை நின்றாலும் தூவானம் விடுவதில்லை” என்பதுபோல், கடந்த ஆட்சியின் சீர்கேடுகள் இன்னும் தொடர்வதாக அவர் கூறினார். கடந்த கால குறைபாடுகளை சரிசெய்து வருவதாகவும், அனைத்தையும் மாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் குறித்து திமுக தரப்பில் ஆபாசமாக பேசப்படுவதாக அவர் கூறினார். பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். வீட்டில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தற்போதைய ஆட்சியை விமர்சிக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை குறிப்பிட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் என்ன செய்தார் எனவும் அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.





